ஆளவந்தான், முத்து திரைப்படங்கள் மறுவெளியீடு

ஆளவந்தான், முத்து திரைப்படங்கள் மறுவெளியீடு 

தற்போது கமல்ஹாசன் விக்ரம் திரைப்படத்தின் மூலம் சூப்பர் ஹிட் கமர்சியல் வெற்றி பெற்றுள்ளார். என்னதான் கமர்சியலாக வெற்றி பெற்றாலும் கமல்ஹாசன் அவரது கிளாசிக் படங்களுக்காகத் தான் நிறைய பேர் போனவர். தமிழில் பல புதுமைகளை நிகழ்த்தியவர் என்ற சாதனை கமலுக்கே சொந்தம். ஆளவந்தான் கமலின் புது முயற்சியில் அடுத்த கட்டம். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான 'ஆளவந்தான்' திரைப்படம் அப்போது போதுமான வரவேற்பு பெற விட்டாலும் பல ரசிகர்களால் தற்போதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கமல்ஹாசன் 1984 ஆம் ஆண்டு எழுதிய 'தாயம்' என்ற கதையை மையமாக வைத்து 'ஆளவந்தான்' திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த படத்திற்கு கதை, திரைக்கதை வசனங்கள் முழுவதும் கமல் தான். சுரேஷ் கிருஷ்ணா படத்தை இயக்க மட்டும் செய்தார். ஆளவந்தான் படத்தில் கமல் இரட்டை வேடங்களில் மிரட்டியிருந்தார்.  இத்திரைப்படம் இன்று சுமார் ஆயிரம் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது. 

ஆளவந்தான், முத்து திரைப்படங்கள் மறுவெளியீடு 

அதேபோல ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் முத்து. கே எஸ் ரவிக்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படமும் இன்று திரையரங்குளில் ரி ரிலீஸ் ஆகியுள்ளது. 
 

Share this story