கூலி படத்தில் அமீர்கான்... உறுதிபடுத்திய நடிகர் உபேந்திரா...!

கூலி படத்தில் அமீர்கான் நடித்துள்ளதை நடிகர் உபேந்திரா உறுதிப்படுத்தி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. கூலி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். கூலி படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்டு 14-ந் தேதி திரைப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
#Updendra confirms #AamirKhan’s presence in #Coolie 🔥. He also says Superstar Rajinikanth is like Dronacharya for him and he is Ekalavya pic.twitter.com/iXQJlXhAqB
— Rajasekar (@sekartweets) April 16, 2025
இந்நிலையில், கூலி படத்தில் நடிகர் அமீர் கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்று என்பதை நடித்துள்ள உபேந்திரா உறுதி செய்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உபேந்திரா, "நான் ஏகலவைன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு துரோணாச்சாரியார் போன்றவர்" என்று தெரிவித்தார். அப்போது அமீர் கான் கூலி படத்தில் நடித்துள்ளாரா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஆம் நடித்துள்ளார் என்று அவர் பதில் அளித்தார்.