சாய் பல்லவியை புகழ்ந்த நடிகர் அமீர்கான்

sai pallavi

’தண்டேல்’படத்தின் இந்தி டிரெய்லரை பாலிவுட் நடிகர் அமீர்கான் வெளியிட்டார்.
 
நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’தண்டேல்'. இப்படம் வருகிற 7-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் இந்தி டிரெய்லரை பாலிவுட் நடிகர் அமீர்கான்  மும்பையில் வெளியிட்டார்.

sai pallavi

அந்த நிகழ்ச்சியில் அமீர்கான் பேசுகையில், "தண்டேல் வருகிற 7-ம் தேதி வெளியாகிறது. என் மகன் ஜுனைத் கானின் படமும் அன்றுதான் வெளியாகிறது. அல்லு அரவிந்த் என் சகோதரர் மாதிரி. அதனால், இந்த நிகழ்ச்சிக்கு வர மகிழ்ச்சியுடன் சம்மதித்தேன். தண்டல் டிரெய்லரை மிக அருமையாக கொடுத்திருக்கிறார் இயக்குனர்.

sai pallavi

இசையும் அருமை. சாய்பல்லவி ஒரு அற்புதமான நடிகை. தண்டேல் பெரிய வெற்றி பெறும் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகள்," என்றார்.

Share this story