விஜய் மில்டன் இயக்கத்தில் நடிக்கும் ஆரி அர்ஜுனன்..!

aari

விஜய் மில்டன் இயக்கம் அடுத்த படத்தில் ஆரி அர்ஜுனன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் மில்டன் அடுத்ததாக தெலுங்கு நடிகரான ராஜ் தருண் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் திரைப்படத்தை இயக்குகிறார். இவர் கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்தை இயக்கினார். அம்மு அபிராமி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பால் டப்பா இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.
தற்பொழுது நடிகர் ஆரி அர்ஜுனன் இப்படத்தில் நடித்துள்ளதை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.


ஆரி இப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவர் கடைசியாக ஜர்னி என்ற வெப் தொடரில் நடித்து இருந்தார். திரைப்படத்தின் டைட்டில் லுக் வரும் ஜூன் 15 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story