காதலை புதிய கோணத்தில் காட்டிய படம் -ஆரோமலே திரை விமர்சனம்
1762824636000
இயக்குனர் சாரங் தியாகு இயக்கத்தில் வெளிவந்துள்ள ஆரோமலே திரை படத்தின் விமர்சனம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
கவுதம் மேனன் இயக்கிய காதல் படங்களை பார்த்து, ‘காதலித்தே ஆகவேண்டும்' என்று சிறுவயதிலேயே ஆசை கொண்டு வளர்கிறார், கிஷன்தாஸ். ஆனால், விதி பள்ளி, கல்லூரியில் அவரது காதல்கள் சொதப்பலிலேயே முடிகின்றன. காதல் ஆர்வத்தில் காவல் நிலைய வாசல்படியையும் மிதிக்கும் நிலைக்கு ஆளாகும் கிஷன் தாசை,அவரது பெற்றோர் கண்டித்து, அறிவுரை கூறி ஒரு தனியார் நிறுவனத்தில் பணிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
அங்கு காதலை வெறுக்கும் மேலதிகாரி சிவாத்மிகா ராஜசேகரைச் சந்தித்து காதல் வயப்படுகிறார் கிஷன்தாஸ். ஒருகட்டத்தில் இருவருக்கும் இடையே முட்டல், மோதல் ஏற்படுகிறது. அந்த மோதல் என்ன? இருவரிடையே காதல் தீ பற்றியதா? இல்லையா? என்பதே ஜாலியான மீதி கதை.
கலகலப்பான கதாபாத்திரத்தைக் கச்சிதமாக கையாண்டு ரசிக்க வைக்கிறார், கிஷன் தாஸ். காதல் தோல்விகளைக் கடக்கும் மனநிலையில் எதார்த்தமான இளைஞனாக நினைவில் நிற்கிறார். சிடுமூஞ்சி மானேஜராக வரும் சிவாத்மிகாவின் இயல்பான நடிப்பு கவனிக்க வைக்கிறது. முந்தைய படங்களை விட நடிப்பும் மேம்பட்டுள்ளது.
வி.டி.வி. கணேஷ் நகைச்சுவையில் நியாயம் சேர்த்தாலும், ‘எமோஷனல்' காட்சிகளில் தடுமாறியிருக்கிறார். ஹர்ஷத் கான் முடிந்தவரை கலகலப்புக்கு உதவியுள்ளார். துளசி, சந்தானபாரதி, பாண்டியன் என அனைவருமே தங்கள் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்துள்ளனர்.