ஜிவி பிரகாஷ் படத்தில் நடிக்கும் அப்பாஸ் -என்ன படம் தெரியுமா ?

GV prakash

முப்பது ஆண்டுக்கு முன்பு சினிமாவில் அறிமுகமுகமானவர் நடிகர் அப்பாஸ் .இவர்  தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் கொல்கத்தாவில் பிறந்து, மும்பையில் படித்து, பெங்களூரில் நடிக்கத் தொடங்கியவர். இவர் காதல் வைரஸ், இனி எல்லாம் சுகமே,  படையப்பா, மலபார் போலீஸ், விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம், அழகிய தீயே முதலிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சாக்லெட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். 1996 ஆம் ஆண்டு கதிரின் காதல் தேசம் படம் மூலம் அப்பாஸ் கதாநாயகனாக அறிமுகமானார். அதனை தொடர் விஐபி, பூச்சூடவா, ஜாலி. கமலுடன் ஹேராம், பம்மல் கே சம்மந்தம், ரஜினியுடன் படையப்பா உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.

50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரமாக கருதப்பட்ட அப்பாஸ், போதிய பட வாய்ப்பு இல்லாத நிலையில், குடும்பத்துடன் நியூசிலாந்தில் செட்டில் ஆகிவிட்டார்

இந்நிலையில் 10 வருடங்கள் இடைவெளிக்கு மீண்டும் சினிமாவில் 'ரீ என்ட்ரி' கொடுக்கவுள்ளார். அதாவது, மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகன நடித்துவரும் படத்தில் அப்பாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பியாண்ட் பிக்சர்ஸ் மூலம் ஜெயவர்த்தனன் தயாரித்து வரும் இப்படம் முழுமையான பொழுது போக்கு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Share this story