இரு சூப்பர் ஹீரோக்களை இயக்குனர் கௌதம் மேனன்.. புதிய படத்தின் அப்டேட்

gautham meon

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் காதல் மற்றும் கேங்ஸ்டர் படங்கள் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவர் இயக்குனர் கௌதம் மேனன். அவர் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா, காக்கா காக்கா, என்னை அறிந்தால் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றவை. 

gautham meon

சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளியான சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவான இப்படம் சிம்பு ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து படைத்தது. இயக்குனராக கலக்கி வரும் கௌதம் மேனன், நடிகராகவும் அசத்தி வருகிறார். தற்போது விஜய் ‘லியோ’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இப்படம் நிச்சயம் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

 

 

Share this story