ஐஸ்வர்யா ராய் இல்லாமல் அயோத்தி சென்ற அபிஷேக் பச்சனால் மீண்டும் சர்ச்சை

ஐஸ்வர்யா ராய் இல்லாமல் அயோத்தி சென்ற அபிஷேக் பச்சனால் மீண்டும் சர்ச்சை 

மாடலிங் துறையில் கொடி கட்டி பறந்த ஐஸ்வர்யா ராய் 1994ஆம் ஆண்டு உலக அழகி  பட்டம் வென்றார். தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அதில் கவனம் செலுத்தினார். தமிழ், இந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்து வந்த அவர் பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சனின் ஒரே மகனான் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் ஜோடி விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் அயோத்தியில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஐஸ்வர்யா இல்லாமல், அபிஷேக் பச்சன் மட்டும் கலந்துகொண்டார். இதனால் மீண்டும் விவாகரத்து பிரச்சனை தலை தூக்கியுள்ளது. 

Share this story