அன்னையர் தினத்தில் உண்மையை வெளியிட்ட நடிகை 'அபிராமி'.

photo

சமுத்திரம், மிடில் கிளாஸ் மாதவன், விருமாண்டி உள்ளிட்ட படங்கள் மூலமாக பிரபலமானவர் நடிகை அபிராமி.  தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோதிகாவின் 36வயதினிலே, மாறா, சுல்தான், நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.அபிராமி  எழுத்தாளர் பவணின் பேரனான ராகுல் பவணை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் தற்போது அன்னையர் தினத்தை முன்னிட்டு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

photo

அதாவது, பெண் குழந்தை ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். குழந்தை கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ நானும் ராகுலும் கடந்த அண்டு கல்கி என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தோம். அதிலிருந்து எங்கள் வாழ்கை அழகாக மாறியது. நான் ஆசிர்வதிக்கபட்டவளாக உணர்கிறேன். அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்” என அந்த பதிவில் அவர் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

photo

Share this story