‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அபிஷன் ஜீவிந்த், நடிக்கும் அடுத்த படம் -என்ன டைட்டில் தெரியுமா ?

abishan

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், அபிஷன் ஜீவிந்த் இணையும் ‘பிக்காசோ’ என்ற படத்தை கவுதம் சிவராமன் எழுதி இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகரும், இயக்குனருமான ரிஷப் ஷெட்டி வெளியிட்டார். டிராமா கம்பெனி சார்பில் ஏ.பாலமுருகன் தயாரிக்கிறார். ஆர்.கார்த்திகேயன், தினேஷ் பாலசந்திரன், ஆர்.ஆர்.தீபன் ராஜ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். கிரீன் காட், டி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இத்தயாரிப்பில் இணைந்துள்ளன.
இரண்டு வெவ்வேறு தலைமுறைகளை சேர்ந்த நடிகர்களின் திரை இணைப்பு, ‘பிக்காசோ’ படத்தை மிகவும் சுவாரஸ்யமான படமாக மாற்றியுள்ளது. பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்ய, லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார். சுரேஷ் எடிட்டிங் செய்ய, விஜி விஜயன் அரங்கம் அமைக்கிறார். ஹீரோயினாக ஷிவானி நாகரம், முக்கிய வேடத்தில் யோகலட்சுமி நடிக்கின்றனர். கானா பாடகர் வினோத் நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. முன்னதாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த், பிறகு ‘வித் லவ்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

Share this story