‘தனி ஒருவன்2’ படத்தில் வில்லனாக களமிறங்குகிறார், ‘அபிஷேக் பச்சன்’.

photo

மோகன் ராஜாவின் தனி ஒருவன் பட இரண்டாம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

photo

கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர்களான ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி, தம்பி ராமையா ஆகியோரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘தனி ஒருவன்’. விறுவிறு காட்சிகள் கொண்ட படத்தில் மிரட்டலான வில்லனாக அரவிந்த் சாமி அசத்தியிருப்பார். இந்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது. அது குறித்த சூப்பர் அப்டேட் தான் தற்போது வந்துள்ளது.

photo

அதாவது தனி ஒருவன்2 படத்தில் வில்லனாக நடிக்க ஐஸ்வர்யா ராயின் கணவரான அபிஷேக் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம், இந்த படத்தில் பாலிவுட் வரை சென்று வில்லனை தேர்வு செய்வதால் அரவிந்த சாமி கதாப்பாத்திரத்தை விட இது மிகவும் பவர் ஃபுல்லாக இருக்கும்  என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share this story