குடும்ப கதையில் வெளியான தலைவன் தலைவி வெற்றி பெறுமா ?
விஜய சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் ஜூலை 25ம் தேதி தலைவன் தலைவி படம் ரிலீஸ் ஆகியுள்ளது .விஜய் சேதுபதிக்கு மஹாராஜா மற்றும் ஏஸ் படத்திற்கு இந்த படம் ரிலீஸ் ஆனதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது .இதில் மஹாராஜா வெற்றி படம் ஆனால் ஏஸ் படம் சுமாரான படம் அதனால் விஜய் சேதுபதிக்கு இது முக்கியமான படம்
குடும்பக் கதைகளுக்கு பெயர் போன இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான படம் என்பதால் இந்தப் படம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விஜய் சேதுபதி மற்றும் பாண்டிராஜ் காம்போவில் உருவான முதல் படம் என்பதால் இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன.காதலிக்க நேரமில்லை படத்திற்கு பிறகு தமிழில் நித்யா மேனன் நேரடியாக நடித்து வெளியாகும் படம் தான் தலைவன் தலைவி. இவர்களது கெமிஸ்டரி படத்தில் எப்படி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது என்பது படம் பார்க்கும் போது தெரியும்.
தற்போது டிரெண்டிங்கில் இருக்கும் இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் சந்தோஷ் நாராயணன். இதற்கு முன்னதாக சூர்யாவின் ரெட்ரோ படத்திற்கு இசையமைத்திருந்த நிலையில் இப்போது இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். .குடும்ப கதையை மையப்படுத்திய இந்தப் படம் எப்படி அமைந்திருக்கிறது, படம் வெற்றி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

