"தொடர்ந்து கலைஞர்களை காவு வாங்கும் காந்தாரா -2"-அதிர்ச்சியில் படக்குழு

காந்தாரா இரண்டாம் பாகம் படப்பிடிப்பு ஆரம்பித்த நாளிலிருந்து தொடர்ந்து படத்தில் பணியாற்றும் சில கலைஞர்கள் உயிரிழப்பதும் ,அடிக்கடி விபத்து நடப்பதும் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது
ரிஷப் ஷெட்டி நடிப்பில், உருவான திரைப்படம் தான் ‘காந்தாரா’. கர்நாடக மாநிலத்தின் மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் வணங்கும் பஞ்சுருளி தெய்வத்தின் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இது இந்திய அளவில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு படம் வெளியானது. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது
சமீபத்தில் படப்பிடிப்புக்கு நடிகர்களை ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.பிறகு தொழில்நுட்பக்கலைஞர் கபில் என்பவர், கடந்த மாதம் கேரளாவில் சவுபர்னிகா நதியில் மூழ்கி உயிரிழந்தார்.
காமெடி நடிகர் ராகேஷ் பூஜாரி, கடந்த மாதம் தனது நண்பரின் திருமண நிகழ்ச்சியில் நடனமாடும்போது மாரடைப்பால் உயிரிழந்தார். படப்பிடிப்புக்கு வந்த கேரளா திருச்சூரை சேர்ந்த விஜூ வி.கே என்பவர், விடுதியில் தங்கியிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.பின்னர் ரிஷப் ஷெட்டி உள்பட 30 பேரை ஏற்றிச்சென்ற ஒரு படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இப்படி தொடர்ந்து அசம்பாவிதம் நடப்பதால் ரிஷப ரெட்டி உள்பட படக்குழு அதிர்ச்சியடைந்து என்ன பரிகாரம் செய்வது என்று ஆலோசித்து வருகின்றனர்