நடிகர் விஷால் நடிக்கும் “மார்க் ஆண்டனி” படத்தின் படப்பிடிப்பில் விபத்து - நடந்தது என்ன!

photo

நடிகர் விஷால் நடித்துவரும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து எற்பட்டுள்ளது. 

photo

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் தயாராகிவரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’  இந்த படத்தில் விஷாலிற்கு ஜோடியாக நடிகை ரித்து வர்மா நடிக்கிறார். வில்லனாக வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டுள்ளது.

 

 

அதாவது லாரி வரும் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து, தொழிலாளர்களை நோக்கி வந்துள்ளது. பின்னர் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடியதால், யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல்  பெரும் விபத்து தடுக்கப்பட்டது. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் எற்படவில்லை என படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story