ஏஸ் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு...!

விஜய் சேதுபதி நடித்துள்ள ஏஸ் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதியின் 50- வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கி தயாரித்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். படத்தின் பின்னணி இசையை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார்.https://youtu.be/QnISQ2wyLlY
படத்தின் இரண்டாம் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பாரில் பெண்களிடம் தவறாக நடந்துக் கொண்ட நபருடன் விஜய் சேதுபதி சண்டையிடும் காட்சி இடம்பெற்றுள்ளது.