நடிகர் அருண் விஜய்க்கு என்னாச்சு ?... சிகிச்சை பெறும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி !

arun vijay

நடிகர் அருண் விஜய்க்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

arun vijay

தமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்திய வருகிறார் நடிகர் அருண் விஜய். யானை, பார்டர் ஆகிய படங்களுக்கு பிறகு அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே’. இந்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார்.

arun vijay

இந்த படத்தில் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பெரிய செட் அமைக்கப்பட்டு சென்னையில் நடைபெற்றது. அதில் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்ததது. 

arun vijay

இந்நிலையில் இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கும் போது நடிகர் அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து படப்பிடிப்பு நிறைவுபெற்ற பிறகு கேரளாவில் உள்ள பிரபல ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அருண் விஜய் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அருண் விஜய்க்கு என்னாயிற்று என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 

Share this story