நயன்தாராவின் ‘மாய நிழல்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

maya nizhal
 நயன்தாராவின் ‘மாய நிழல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் பிசியாக நடித்து வருபவர் நயன்தாரா. தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ‘லயன்’ படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அதோடு விரைவில் வெளியாகவுள்ள அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். 

maya nizhal

இதற்கிடைய கடந்த ஏப்ரல் மாதம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘நிழல்’.  நடிகர் குஞ்சாக்கோ போபன் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் நயன்தாரா லீட் ரோலில் நடித்திருந்தார்.  ஒரு குழந்தையை மையமாக வைத்து உருவான இப்படத்தை எடிட்டர் என் பட்டாதிரி இயக்கினார். இப்படத்திற்கு சூரஜ் இசையமைத்தார். 

maya nizhal

க்ரைம் த்ரில்லரில் உருவான இப்படம் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு தற்போது வெளியாக உள்ளது. ‘மாய நிழல்’ என்று தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் அக்டோபர் 28-ஆம் தேதி வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

Share this story