அதிரடி ஆக்ஷன்... வீர தீர சூரன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ்...!
Fri Mar 21 2025 6:48:15 AM

அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த வீர தீர சூரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் வீர தீர சூரன் படம் உருவாகியுள்ளது. தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் வெளியான 2 பாடல்கள், டீசர் கவனம் ஈர்த்துள்ளது. இப்படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லர் காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக இருக்கிறது. ஓரிரவில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது. விக்ரமை கொள்ள பலப்பேர் ஆயுத்தமாகும் காட்சி டிரெய்லரில் இடம் பெற்றுள்ளது. படத்தை குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.