மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் தனுஷ்... படத்தில் இணையும் பிரபல இயக்குனர் !

dhanush

நடிகர் தனுஷ் விரைவில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவின் பிரபல நடிகராக இருக்கும் தனுஷ், பலமொழிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் ‘வாத்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். 

dhanush

இந்த படத்தை முடித்து புதிய படம் ஒன்றை நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

dhanush

தமிழ் சினிமாவில் பன்முக திறமைக் கொண்ட தனுஷ், ‘பா.பாண்டி’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இந்த படத்தில் நடிகராகவும், பாடலாசிரியராகவும், பாடகராகவும் பணியாற்றியுள்ளார். தன்னுடைய முதல் படத்தையே வெற்றிப்படமாக்கியுள்ளதால் இரண்டாவது படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால்சலாம்’ படத்திலும் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story