சந்தானத்தின் வழக்கமான காமெடி சரவெடி... பிறந்தநாளையொட்டி 'கிக்' டிரெய்லர் வெளியீடு !

kick

சந்தானத்தின் பிறந்தநாளையொட்டி 'கிக்' படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

kick

தமிழ் மொழியில் மட்டுமே நடித்து வரும் சந்தானம், முதல்முறையாக கன்னடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'கிக்'. இந்த படத்தை பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ‘தாராள பிரபு’ படத்தில் நடித்த தன்யா ஹோப் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஃபார்டியூன் பிலிம்ஸ் தயாரிப்பில் நவீன்ராஜ் இந்த படத்தை தயாரித்துள்ளார். 

kick

சந்தானத்துடன் இந்த படத்தில் தம்பி ராமையா, பிரமானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, Y.G.மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, முத்துகாளை, ஷகிலா, கூல் சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரண்டு விளம்பர நிறுவனத்தில் வேலை பார்க்கும் கதாநாயகனும், கதாநாயகியும் தொழில்முறை போட்டி காரணமாக எலியும், பூனையுமாக மோதிக் கொள்ளும் வித்தியாசமாக கதைக்களம் கொண்ட படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

kick

அர்ஜூன் ஜன்யா இசையில் இப்படத்தின் பாடல்கள் உருவாகி உள்ளது. முழு நீள காமெடி படமாக உருவாகும் இப்படம் தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்நிலையில் விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லரில் சந்தானத்தின் வழக்கமான காமெடியே இடம்பெற்றுள்ளது. சந்தானத்தின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story