இந்தியில் பேசு.. 20 நிமிடங்கள் அலைகழித்த சி.ஆர்.பி.எப் வீரர்கள்.. நடிகர் சித்தார்த் பதிவால் அதிர்ச்சி !

Siddharth

மதுரை விமான நிலையில் இந்தியில் பேசி அலைக்கழித்தாக நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பன்முக திறமைக் கொண்டு செயல்பட்டு வருபவர் நடிகர் சித்தார்த். சமூக நலன் சார்ந்து உருவாகும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமிழை தவிர தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். 

Siddharth

சமூக எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் பரபரப்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் தனது பெற்றோரை இந்தியில் பேச சொல்லி வற்புறுத்தியுள்ளனர். கூட்டமே இல்லாத அந்த விமான நிலையில் 20 நிமிங்கள் அலைக்கழித்துள்ளனர். 

மேலும் அவர் கையில் இருந்த பையிலிருக்கும் நாணயங்களை எடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுங்கள் என கூறியும் தொடர்ந்து இந்தியிலேயே பேசியுள்ளனர். அதற்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போது இந்தியாவில் இப்படித்தான் என்று கூறியுள்ளனர். வேலையில்லாதவர்கள் தங்களது அதிகாரத்தை காட்டுகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார். 


 

Share this story