இதய இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்... பிரபல நடிகையை உருகி உருகி காதலிக்கும் நடிகர் சித்தார்த் !

Siddhart

பிரபல நடிகையின் பிறந்தநாளையொட்டி நடிகர் சித்தார்த் போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளது. 

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருபவர் சித்தார்த். தனது இயல்பான நடிப்பாலும், க்யூட் லுக்காலும் ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என்.ஹெச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

aditi rao

நல்ல கதையுள்ள திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் சித்தார்த், பிரபல நடிகையான அதிதி ராவை காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இவர்களது செயல்பாடுகள் இருக்கிறது. 

இந்நிலையில் தனது 36வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை அதிதி ராவிற்கு சித்தார்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில் இதயத்தின் இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உனது சிறிய, பெரிய கனவுகள் நிறைவேற வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். சித்தார்த்தும், அதிதியும், ‘மகாசமுத்திரம்’ படத்தின் மூலம் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பு இவர்களுக்கிடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. 

Share this story