‘அன்பால் ஆனதே உலகம்’ - ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன சிம்பு !

simbu

 பொங்கல் பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டது. உறவினர்கள் ஒன்றுக்கூட பொங்கலிட்டு சூரியனை வழிப்பட்டு பொங்கலை விமர்சையாக மக்கள் கொண்டாடினார். பொங்கல் பண்டிகையையொட்டி பிரபலங்கள் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

simbu

அந்த வகையில் நடிகர் சிம்பு, ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த இனிய பொங்கல் திருநாளில் உங்கள் அனைவரது இல்லங்களிலும், மனங்களிலும் இன்பம் பொங்கி வழியட்டும். எதிர்மறை எண்ணங்களை மறந்து நேர்மறை எண்ணங்களை பரப்புங்கள். 

அன்பால் ஆனதே இந்த உலகம். எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள். அன்பு இன்பத்தை தரும். நாம் அனைவரும் அன்பால் இணைவோம் என்று அந்த அறிக்கை சிம்பு தெரிவித்துள்ளார். தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story