சம்பளத்தில் கறார் காட்டும் வடிவேலு... பேச்சுவார்த்தை நடத்திய பிரபல இயக்குனர் அதிர்ச்சி !
நடிகர் வடிவேலு கேட்ட சம்பளத்தை பார்த்து பிரபல இயக்குனர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி கிங்காக இருப்பவர்தான் வடிவேலு. தனது யதார்த்தமான காமெடியால் இன்றைக்கும் ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார். ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சனையால் நீண்ட நாட்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். சமீபத்தில் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததற்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
முதலில் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையடுத்து இந்த படம் அடுத்த மாதம் ரிலீசாகவுள்ளது.

இந்த படத்தையடுத்து உதயநிதியுடன் ‘மாமன்னன்’, ராகவா லாரன்ஸுடன் ‘சந்திரமுகி 2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல இயக்குனரான கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் புதிய படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தில் நடிப்பதற்காக வடிவேலுவிடம் 20 நாட்கள் கால்ஷீட் கேட்ட நிலையில் ஒரு நாளை 25 லட்சம் சம்பளம் கேட்டிருந்தார். இதை கேட்ட படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் என்ன செய்வத என்று தெரியாமல் தவித்து படகுழுவினர் கே.எஸ்.ரவிகுமாரிடம் விஷயத்தை சென்னனர். இதையடுத்து வடிவேலுவிடம் அவர் நிலையில் மிகவும் கறார் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

