தெலுங்கில் திட்டமிட்டபடி வெளியாகும் ‘வாரிசு’... தயாரிப்பாளர் சங்கம் உறுதி !

varisu

தெலுங்கில் ‘வாரிசு’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வாரிசு’. தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என மொழிகளில் வெளியாகவுள்ளது. அதனால் இப்படம் தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. வரும் பொங்கலுக்கு வெளியாகும்‌ என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

varisu

இந்த படத்தை தமிழகத்தில் செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடவுள்ளது. இதுதவிர சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. இதற்கிடையே பண்டிகை தினங்களில் மற்ற மொழி படங்கள் வெளியிடக்கூடாது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் கூறியிருந்தது. அதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாரசுடு’ படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. 

இந்நிலையில் இது குறித்து ஆலோசிக்க தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு தேனான்டாள் பிலிம்ஸ் முரளி, ‘வாரிசு’ திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும்  என்றும், அதிக அளவில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் கூறினார். மேலும் பேசிய அவர், ‘வாரிசு’ படம் குறித்து தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்திடம் பேசியுள்ளதாகவும், அவர்கள் சுமூகமான பதிலை அளித்துள்ளதாகவும், அதனால் திட்டமிட்டபடி தெலுங்கிலும் படம் வெளியாகும் என தெரிவித்துள்ளார். 

 

Share this story