சூப்பர் ஸ்டாருக்கு பிறகு இனி விஜய்தான்... ஜப்பானுக்கு போகும் விஜய்யின் சூப்பர் ஹிட் படம் !

master

 விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் விரைவில் ஜப்பானில் வெளியாகவுள்ளது. 

பொதுவாக இந்தியாவின் சூப்பர் ஹிட் திரைப்படங்கள் ஜப்பானில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் தென்னிந்தியாவிலிருந்து ரஜினி படங்கள் மட்டும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்தில் கூட தெலுங்கிலிருந்து ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியானது. 

master

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் சூப்பர்ஹிட் திரைப்படமான ‘மாஸ்டர்’ விரைவில் ஜப்பானில் வெளியாகவுள்ளது. ‘மாஸ்டர் டீச்சர் இஸ் கம்மிங்’ என்று தலைப்பு மாற்றப்பட்ட இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதையொட்டி ஜப்பான் மொழியில் இருக்கும் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் முன்பதிவு தொடங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

master

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிரட்டலாக உருவான திரைப்படம் தான் ‘மாஸ்டர்’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடிகாக மாளவிகா மேனனன் நடித்துள்ளார். இந்த படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்த இந்த படம் வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story