ரசிகர்களை சந்திக்கும் விஜய்... பனையூர் இல்லத்தில் முக்கிய ஆலோசனை !

vijay

நடிகர் விஜய், பனையூர் இல்லத்தில் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ரிலீசுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதேநேரம் அஜித்தின் ‘துணிவு’ படமும் வெளியாகவுள்ளது. இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாவதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுவதால் ‘வாரிசு’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் நடிகர் விஜய், ரசிகர்கள் மற்றும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நாளை சந்தித்த பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பனையூர் இல்லத்தில் இன்று 3 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து நாளை இந்த சந்திப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 
 

Share this story