மிரட்டும் தாடியுடன் விக்ரம்.. வைரலாகும் புகைப்படங்கள் !

vikram

தாடியுடன் இருக்கும் புகைப்படங்களை நடிகர் விக்ரம் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். 

கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களுக்கு பிறகு விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தங்கலான்’. பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி உருவாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது. 

vikram

இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து மலையாள நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 

vikram

கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் கடப்பாவில் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் விக்ரம் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாடியுடன் மிரட்டலான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகர் விக்ரம் வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பெரிய தாடியுடன் பெரிய பொறுப்பு வருகிறது என்று தெரிவித்துள்ளார். விக்ரமின் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 


 

Share this story