‘நலமுடன் இருக்கிறேன்’ - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விமல் !

vimal

உடல் நலக்குறைவால் நடிகர் விமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இருப்பவர் நடிகர் விமல். விஜய்யின் ‘கில்லி’ படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு கடந்த 2009-ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான ‘பசங்க’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். 

vimal

பின்னர் களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, ஜன்னல் ஓரம், புலிவால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘விலங்கு’ வெப் தொடர் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் நடிகர் விமலுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் நிம்மதி அடைய செய்துள்ளது. 

 

 

Share this story