‘தமிழ் படங்களை வெளியிடுவதில் அரசியல்’ - நடிகர் விஷ்ணு விஷால் காட்டம் !

GattaKusthi

தமிழ் திரைப்படங்களை பிற மொழிகளில் வெளியிடுவதில் அரசியல் இருப்பதாக நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். 

விஷ்ணு விஷால் மற்றும் செல்லா அய்யாவு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. மல்யுத்தத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

GattaKusthi

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்று கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது பேசிய விஷ்ணு விஷால், கணவன் - மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறித்தும் ‘கட்டா குஸ்தி’ படத்தில் பேசப்பட்டிருக்கிறது. 

தென்னிந்திய திரைப்படங்கள் பாலிவுட் படங்களை விட இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கட்டாயப்படுத்தி திரைப்படங்களை வாங்கி விற்கின்றனர் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஆனால் அந்த தகவல் தவறானது என்று கூறினார். தமிழ் திரைப்படங்களை பிற மொழி நிறுவனங்கள் வாங்கி வெளியிடுவதில் அரசியல் இருப்பதாக கருதுகிறேன் என்று விஷ்ணு விஷால் தெரிவித்தார்.  

Share this story