'ராட்சஸன்' இயக்குனருடன் மீண்டும் கூட்டணி... விஷ்ணு விஷாலின் புதிய பட அறிவிப்பு !

vishnu vishal

'ராட்சஸன்' படத்தின் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் மீண்டும் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நாயகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால்.  ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு ‘குள்ளநரி கூட்டம்’, ‘முண்டாசுபட்டி’, ‘ஜீவா’, ‘மாவீரன் கிட்டு’, 'ராட்சஸன்' உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 'எப்ஐஆர்' மற்றும் கட்டாகுஸ்தி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. 

vishnu vishal

தற்போது அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்ந்தமாகி வருகிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால்சலாம்' படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இதுதவிர தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள 'ராயன்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

vishnu vishal

இதற்கிடையே விஷ்ணு விஷால் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று 'ராட்சஸன்'. சைக்கோ த்ரில்லரில் உருவான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராம்குமாருடன் விஷ்ணு விஷால் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார். முண்டாசுப்பட்டி, ராட்சஸன் ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. விஷ்ணு விஷாலின் 21வது படமாக உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

Share this story