விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நடிகர் ‘அஜித்’- நேரில் வரமுடியவில்லை என வருத்தம்.

photo

நடிகர் அஜித்குமார் விஜயகாந்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

photo

நாடு போற்றும் நாயகனாக வாழந்து மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக  திரைத்துறை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். படப்பிடிப்பு காரணமாக வெளியூர், வெளிநாடுகளில் உள்ளவர்கள் வீடியோ மூலமாக இரங்கலை பதிவு செய்கின்றனர். இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் பிரேமலதா மற்றும் சுதீஷை தொலைபேசியைல் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் துபாயில் இருப்பதால் தன்னால் நேரில் பங்கேற்க முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

Share this story