மகிழ் திருமேனி கூட்டணியை உறுதி செய்த அஜித்... பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ‘ஏகே 62‘ !

ak 62

இயக்குனர் மகிழ் திருமேனியுடனான கூட்டணியை நடிகர் அஜித் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘துணிவு’ படத்தின் வெற்றியால் அடுத்தடுத்த படங்களை வெற்றி கொடுக்கவேண்டும் என்ற மூடில் நடிகர் அஜித் இருக்கிறார். அந்த வகையில் அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. லைக்கா தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு அனிரூத் இசையமைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. 

ak 62

கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்ற வந்த நிலையில் விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் அஜித்திற்கு திருப்தியில்லை. அதனால் பட நிறுவனத்தை அணுகி அவர்களிடம் அனுமதி பெற முயற்சித்தார். ஆனால் அஜித்தை போன்று லைக்கா நிறுவனத்திற்கு கதையில் திருப்தியில்லை என கூறப்படுகிறது. 

அதனால் அஜித்தின் 62வது படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. தடையற காக்கா, மீகாமன், தடம், கலகத்தலைவன் ஆகிய வெற்றிப் படங்களை அவர் கொடுத்துள்ளார். சுமார் 220 கோடி ரூபாயில் பான் இந்தியா படமாக இப்படம் உருவாகிறது. சாம் சி.எஸ் இசையில் உருவாகும் இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரம் ‘ஏகே 63’ படத்தை விக்னேஷ் சிவன் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. 

 

Share this story