முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து சொன்ன நடிகர் அஜித்... வியப்பில் அரசியல் கட்சிகள் !

ajith

 முன்னாள் முதல்வர் எடபாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், எப்போது ஆடம்பரத்தை விரும்பாதவர். ரசிகர் மன்றத்தால் பிரச்சனை வந்தபோது அதை கலைத்துவிட்டு எளிமையாக வாழ்ந்து வருகிறார். தன்னுடைய படங்களில் பெரிய மாஸ் காட்டி நடிக்காத ஹீரோவாக வலம் வருகிறார். 

ajith

அவரது திரைப்படங்களில் அனல் தெறிக்கும் வசனங்கள் மற்றும் அரசியல் எப்போதும் கலக்காது. தன்னுடைய படங்களின் ப்ரோமோஷன்களில் எப்போதும் அவர் கலந்துக் கொள்ளமாட்டார். அதுபோன்று பொது நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் தொடர்பான நிகழ்வுகளை அவர் எப்போதும் விரும்பமாட்டார். சினிமாவில் எப்போதும் தனித்துவமான நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். 

ajith

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை கவர்ந்த நடிகராக நடிகர் அஜித் இருந்தார். அதனால் தான் ஜெயலலிதா இறந்தபோதும் கூட அஜித், அதிமுக தலைமை ஏற்க போகிறார் என்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடபாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பையே ஏற்படுத்தியுள்ளது. 

 நீண்ட சட்ட போராட்டங்களுக்கு பிறகு பொதுச்செயலாளராக எடபாடி பழனிசாமி, பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு அஜித் வாழ்த்து சொன்னது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சமீபத்தில் அஜித்தின் தந்தை மறைவுக்கு எடபாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Share this story