சென்னை திரும்பிய நடிகர் அஜித்.. புகைப்படங்கள் வைரல்...!

ak

வெளிநாடுகளில் நடைபெற்ற கார் ரேஸ்களில் கலந்து கொண்டு விட்டு, நடிகர் அஜித் சென்னை திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் அஜித், ஒரு பக்கம் ’விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம், கார் ரேஸ் போட்டிகளிலும் கலந்து கொண்டார். கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில், இந்தியாவின் சார்பில் "அஜித் குமார் ரேசிங் குழு’ கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தது. அதைத்தொடர்ந்து, இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியிலும் "அஜித் குமார் ரேசிங் அணி கலந்து கொண்டு , அதிலும் மூன்றாம் இடம் பிடித்து அசத்தியது.

ak
இந்த நிலையில், கார் பந்தயங்களை முடித்துக்கொண்டு, அஜித் சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில், அவர் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த நிலையில், அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story