அஜித் எடுத்த அதிரடி முடிவு... ‘AK 62’ குறித்து மேலாளர் கொடுத்த அப்டேட் !

ajith

தனது 62வது படத்திற்காக நடிகர் அஜித் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக அவரது மேலாளர் தெரிவித்துள்ளார். 

‘துணிவு’ படத்திற்கு பிறகு தனது 62வது படத்தில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளார். லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார். பிரபல இசையமைப்பாளர் அனிரூத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். தற்போது இந்த படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதனால் எப்போது இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். 

ajith

இதற்கிடையே பைக் பயணத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் நடிகர் அஜித். அதனால் ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பின் போது உலக பைக் பயணத்தை தொடங்கினார். இதையொட்டி இந்தியாவில் உள்ள பல நகரங்களில் பைக் பயணத்தை மேற்கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. 

ajith

இதையடுத்து இரண்டாம் கட்ட பைக் பயணத்தை அஜித் மீண்டும் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அஜித்தின் 62வது படம் என்னாவாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் தனது 62வது படத்தை முடித்துவிட்டு தான் இரண்டாம் கட்ட உலக பைக் பயணத்தை அஜித் தொடங்குவார் என்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், லைகா நிறுவனம் தயாரிக்கும் தனது அடுத்த படத்துக்கு பிறகு ,திரு அஜித் குமார் துவங்க இருக்கும் 2ஆவது சுற்று உலக மோட்டார் சைக்கிள் சுற்று பயணத்துக்கு #rideformutualres (பரஸ்பர மரியாதை பயணம்) என்று பெயரிடப்பட்டு உள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


 

 

 

 

Share this story