சென்னை திரும்பிய அஜித்.. விரைவில் தொடங்கும் ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் !

நடிகர் அஜித் சென்னை திரும்பியுள்ள நிலையில் விரைவில் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘தடம்’, ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த மே 1-ஆம் தேதி வெளியானது. அனிரூத் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ப்ரீ பிரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதேநேரம் அஜித்தும் தனது பைக் பயணத்தை தொடங்கி சென்றுக் கொண்டிருந்தார். அதனால் படத்தை லைக்கா கைவிடவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் பைக் பயணத்தை பாதியில் நிறுத்திய அஜித், சென்னை திரும்பியுள்ளார். அதனால் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இயக்குனர் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அறிவிப்பும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
#AjithKumar LATEST CLIP 😍🔥#VidaaMuyarchi pic.twitter.com/IslhpPxjbh
— AJITH FANS COMMUNITY (@TFC_mass) August 23, 2023