பைக் டூர் ஓவர்.... அடுத்து சைக்கிள் டூர்.. பட்டையை கிளப்பும் அஜித் !
பைக் டூரை சமீபத்தில் முடித்த நடிகர் அஜித், தற்போது சைக்கிள் டூர் கிளம்பிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
பைக் மீது கொள்ளை பிரியம் கொண்டவர் நடிகர் அஜித். அதனால் எப்போதும் பைக் ஓட்டுவதிலேயே தனது பொழுதை கழித்து வருகிறார். சமீபத்தில் உலக பைக் பயணத்தை தொடங்கிய அஜித், இந்தியாவில் தனது முதல்கட்ட பைக் பயணத்தை நிறைவு செய்தார்.
இதையடுத்து இரண்டாம் கட்டமாக வெளிநாடுகளில் பைக் பயணம் செய்து வந்தார். பைக் பயணம் மேற்கொண்டதால் லைக்கா நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் ஷூட்டிங்கும் தள்ளிப்போனது. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் எப்போதும் பைக் பயணத்தை விரும்பி செய்யும் அஜித், தற்போது சைக்கிள் பயணத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து புகைப்படம் ஒன்று வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.