அப்பா மறைவால் கலங்கி நிற்கும் அஜித்.. நேரில் சென்று ஆறுதல் கூறிய அஜித் !

ajith

 தனது அப்பா மறைவால் கலங்கி நிற்கும் அஜித்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித், தற்போது சென்னை ஈசிஆரில் உள்ள ஈஞ்சம்பாக்கம் இல்லத்தில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அஜித்துடன் தந்தை சுப்ரமணியமும் இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்து வந்தார். 

ajith

86 வயதாகும் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தார். ஆனால் இன்று தூக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்துவிட்டது. அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகை சேர்ந்த பிரபலங்கள், உறவினர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

ajith

இந்நிலையில் அஜித்தின் தந்தை மறைந்தததை அறிந்த நடிகர் விஜய், அவரது வீட்டிற்கு சென்று நேரில் ஆறுதல் கூறினார். நடிகர் விஜய், அஜித்தின் வீட்டிற்கு வந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

 


 

Share this story