அஜித்தை இயக்க தயாரான மற்றொரு இயக்குனர்... குழப்பத்தில் லைக்கா !

ak 62

 அஜித்தின் 62-வது படத்தை இயக்க சூப்பர் ஹிட் இயக்குனர் ஒருவர் போட்டிப்போடுவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.‌

அஜித்தின் 62-வது படத்தை 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் இயக்குனர் விக்னேஷ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. லைக்கா தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் 6 மாதம் நடைபெற்று வந்த நிலையில் கதையில் திருப்தியில்லை என அஜித் கூறிவிட்டதால் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறி விட்டதாக தகவல் வெளியானது. 

ak 62

அதனால் அஜித்தின் 62-வது படத்தை 'கலகத்தலைவன்' படத்தை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. சமீபத்தில் அஜித்தை சந்தித்த மகிழ் திருமேனி ஒரு கதையை கூறியுள்ளார். அந்த கதை அஜித்திற்கு பிடித்துள்ளதால் ஓகே சொன்னதாக தகவல் கசிந்தது. அதனால் விரைவில் அஜித்தின் 62வது படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ak 62

ஆனால் அஜித்தின் 62வது படத்தை இயக்க இயக்குனர் வெங்கட் பிரபுவும் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அஜித்தை வைத்து 'மங்காத்தா' என்ற ப்ளாக் பஸ்டர் படத்தை வெங்கட் பிரபு கொடுத்துள்ளார். இந்த இரண்டு இயக்குனர்களில் யாரை தேர்வு செய்வது என லைக்கா குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு காரணம் விஜய்யின் 'லியோ' படத்தின் டைட்டில் பட்டையை கிளப்பியுள்ளது. இந்த போட்டியை சமாளிக்கும் விதமாக அஜித் 62 இருக்கவேண்டும் என்று லைக்கா கருதுகிறது. அதனால் இரண்டு இயக்குனர்களை தேர்வு செய்ய முடியாமல் தவித்து வருகிறது. 

Share this story