புது பிசினஸ் தொடங்கிய அஜித்... ஹாப்பியான பைக் ரைடர்கள் !

ajith

நடிகர் அஜித் குமார் புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் அஜித்குமார். சினிமாவில் பிசியாக நடித்த தரும் அவர் பைக் ரைடிங் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தற்போது உலக பைக் ரைடிங்கை தொடங்கியுள்ள அவர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதையடுத்து தற்போது இந்தியாவின் அண்டை நாடுகளில் பைக் பயணம் செய்து வருகிறார். 

ajith

நடிகர் அஜித் புதிய பிசினஸ் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாழ்க்கை ஒரு அழகான பயணம். அதன் எதிர்பாராத தருணங்கள், திருப்பங்கள் மற்றும் சிறந்த பாதையை கொண்டாடுங்கள். எனது மோட்டார் சைக்கிள் ஆர்வத்தை தொழில் நிறுவனமாக மாற்றும் முயற்சியாக ஏகே மோட்டோ ரைடு என்ற சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். 

ajith

இந்தியாவின் எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளில் மட்டுமின்றி சர்வதேச சாலைகளிலும் பயணம் செய்ய ஆர்முள்ள ரைடர்கள், சாகச ஆர்வலர்கள் மற்றும் பயண விரும்பிகளுக்கு  ஏகோ மோட்டோ ரைடு சுற்றுப்பயணங்களை வழங்கும். பாதுகாப்பு மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் சுற்றுப்பயணங்கள் முழுவதும் நன்பகத்தன்மையை உறுதி செய்கிறோம். 

நன்றாக பராமரிக்கப்படும் சாகச சுற்றுலா சூப்பர் பைக்குகளை ஏகே மோட்டோ பைக் நிறுவனம் வழங்கும். தொழில்முறை வழிகாட்டிகள், மோட்டர் சுற்றுப்பயணங்களின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர்கள், உள்ளூர் பழக்க வழக்கங்கள், மரபுகள் பற்றிய விரிவான அறிவை கொண்டவர்கள் தொடக்கம் முதல் இறுதி வரை ரைடர்களுக்கு தடையற்ற மற்றும் அதிவேக அனுபவத்தை வழங்குவார் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Share this story