'விடாமுயற்சி’ நடிகர் அஜித்தின் ரியல் ஸ்டண்ட்... பதறவைக்கும் காட்சிகள்!!

tn

அஜித்குமார் நடிக்கும்  'விடா முயற்சி திரைப்படத்தின் பதறவைக்கும்  படப்பிடிப்பு காட்சிகள் வெளியானது.

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடா முயற்சி.  இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான்  நாட்டில் முதற்கட்டமாக தொடங்கியது.

tn

தொடர்ந்து விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் ஓராண்டாகியும், அஜித் திரைப்படம் இன்னும் வெளியாகதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளன.  இருப்பினும் விடாமுயற்சியின் முக்கிய அப்டேட் ஏதேனும் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர்.


இந்நிலையில் விடாமுயற்சி படப்பிடிப்பின் போது கார் விபத்தில் நடிகர்கள் அஜித், ஆரவ்  சிக்கி உள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர்-ல் நடந்தது என்ன என்பதற்கான வீடியோவை நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில்,  நடிகர் அஜித் தனது  உயிரை பணயம்  வைத்து இது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்றும் , அது தங்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிப்பதாகவும் ரசிகர்கள் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Share this story