நடிகர் அகில் நடித்துள்ள புதிய பட டைட்டில் அறிவிப்பு...

நடிகர் அகிலின் புதிய படத்திற்கு லெனின் என பெயரிடப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக உள்ள நாகார்ஜுனாவின் மகன் அகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகனாக இதுவரை 5 படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ’ஏஜெண்ட்' கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இவரது அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
This role is going to be remembered for a long time!! 💥
— Naga Vamsi (@vamsi84) April 8, 2025
Can’t wait for you all to witness @AkhilAkkineni8 in his most stunning avatar 🔥
Presenting you all ~ #LENIN ❤️🔥#Akhil6 @sreeleela14 @iamnagarjuna @KishoreAbburu @MusicThaman @NavinNooli @artkolla #NaveenKumarI… pic.twitter.com/IsyooyDViq
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் முரளி கிஷோர் இயக்க உள்ளார். இந்நிலையில், அகிலின் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் பெயர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு லெனின் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார். தமன் இசையமைக்கிறார்.