இளைஞரை கொலை செய்த விஜய், அஜித் பட நடிகர் கைது

இளைஞரை கொலை செய்த விஜய், அஜித் பட நடிகர் கைது

விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் புபேந்தர் சிங். அஜித் நடித்த வில்லன் படத்திலிம் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்து தெலுங்கிலும் பல படங்களில் அவர் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். அதையடுத்து, இந்தி டிவி தொடர்களில் அவர் அப்பா, வில்லன் வேடங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், உபியில் உள்ள அவருக்குச் சொந்தமாக பண்ணை தோட்டம் உள்ளது. இதன் அருகே குர்தீப் என்பவருக்கும் சொந்தமான தோட்டம் உள்ளது. புபேந்தர் தந் தோட்டத்தை சுற்றி வேலி அமைக்க மரங்களை வெட்ட முயன்றபோது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 

இளைஞரை கொலை செய்த விஜய், அஜித் பட நடிகர் கைது

இதன் விளைவாக ஆத்திரம் அடைந்த குபேந்தர் தனது உதவியாளர்களை கொண்டு குர்தீப் குடும்பத்தை சரமாரியாக தாக்கினார். மேலும், தன் துப்பாக்கியை கொண்டு சுட்டதில், குர்தீப்பின் மகன் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் புபேந்தரை போலீசார் கைது செய்தனர். 
 

Share this story