'நடிகர் அருண் விஜய்'க்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்த ஐக்கிய அரபு அமீரகம்.

photo

நடிகர் அருண் விஜய்க்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கி கவுரவிக்கப்பட்டுளளது

photo

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோலிவுட்டின் பிரபலங்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த நிலையில் இயக்குனர் விஜய் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரகம் இந்த ஆண்டு ஜனவரியில் கோல்டன் விசா வழங்கியதை அடுத்து, நடிகர் அருண் விஜய்க்கு கெளரவ கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் ட்விட்டரில் " இந்த கௌரவத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி" என பதிவிட்டு கோல்டன் விசா பெறும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.


இந்த கோல்டன் விசாவை பயன்படுத்தி, வெளிநாட்டவர் நீண்டகாலத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழவும், தொழில் செய்ய முடியும்.ற்போது அது அருண் விஜய்க்கு கிடைத்துள்ளது. அருண் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த யானை,சினம் ஆகிய படங்கள் ஓரளவு வரவேற்பை பெற்ற நிலையில்  தற்போது அவர் நடிப்பில் பார்டர் திரைப்படம் தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story