‘ரெட்ட தல’ படத்திற்காக டப்பிங் பணிகளை நிறைவு செய்தார் நடிகர் அருண் விஜய்!

arun vijay

நடிகர் அருண் விஜய் ரெட்ட தல படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளார்.


நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வணங்கான் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதே சமயம் இவர், சிவகார்த்திகேயனின் மான் கராத்தே பட இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ரெட்ட தல எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் இணைந்து சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், பாலாஜி முருகதாஸ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.

aruun vijay

இந்த படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அருண் விஜய், இந்த படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் ரெட்ட தல படத்தின் ரிலீஸ் தேதி இனிவரும் நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story