திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம்

ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மிஷன் சாப்டர்1- அச்சம் என்பது இல்லையே’ ஸ்ரீஸ்ரீ சாய் மூவீஸ் நிறுவனம் தாயாரித்து உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த  படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. படம் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டது. தன் குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு முன்னர் தந்தை சிறையில் அடைக்கப்படுகிறார். அவர் அங்கிருந்து தப்பி தனது மகளின் உயிரைக் காப்பாற்றினாரா என்பது தான் கதைக்களம். 

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் அருண் விஜய் சாமி தரிசனம்

இப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடிகர் அருண் விஜய், திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் ரசிகர்கள் பலரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். 

Share this story