60 வயதில் இளம் பெண்ணுடன் திருமணம்.. வில்லன் நடிகர் செயலால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் !

Ashish Vidyarthi

 பிரபல வில்லன் நடிகரான ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60 வயதில் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். 

டெல்லியை சேர்ந்தவர் பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘தில்‘ படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானார். 

Ashish Vidyarthi

முதல் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதனால் ரஜினியின் ‘பாபா’, விஜய்யுடன் பகவதி, தமிழன், கில்லி என அடுத்தடுத்த படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதுதவிர எழுமலை, தமிழ், ஆறு, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.  

Ashish Vidyarthi

பிசியான நடிகராக இருந்தபோது நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி, பழம் பெரும் நடிகையான சகுந்தலாவின் மகளான ராஜோஷி பருவாவை திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவரும் சமூகமாக வாழ்ந்து வந்தனர். அதன்பிறகு கருத்து வேறுப்பாட்டால் கடந்த சில ஆண்டுகளுக்கு இருவரும் பிரிந்துவிட்டனர். பின்னர் தனியாக வாழ்ந்து வந்த 60 வயதான ஆஷிஷ் வித்யார்த்தி, அசாமை சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை திடீரென இன்று இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார். கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர். ஆஷிஷ் வித்யார்த்தியின் திருமண புகைப்படம் வெளியாகி இணையத்தில் நெட்டிசன்களின் கிண்டலுக்கும் ஆளானது. 

 

 

Share this story