நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்

நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்

பிரபல நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியனின் திருமணம் திருநெல்வேலியில் இன்று நடைபெற்றது. 

நடிகை கீர்த்தி பாண்டியனை கரம் பிடித்தார் நடிகர் அசோக் செல்வன்

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். சூது கவ்வும், ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான போர்த்தொழில் திரைப்படமும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தும்பா, அன்பிற்கினியாள் உள்ளிட்ட படங்களில் கீர்த்தி பாண்டியன் நாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டினரும் சம்மதம் தெரிவித்த நிலையில், நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து, திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் நடந்து முடிந்துள்ளது. இதில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

Share this story