பா ரஞ்சித் படத்தை நிறைவு செய்த அசோக் செல்வன்... கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு !

ashok selvan

 அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். 

வேகமாக வளர்ந்து வரும் ஹீரோவான நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து சாந்தனு பாக்கியராஜ், பிரித்வி, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பா ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். 

ashok selvan

இந்த படத்தை லெமன் லீஃப் கிரியேஷன் நிறுவனத்துடன் இணைந்து நீலம் பிரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. தமிழழகன் ஒளிப்பதிவு ​செய்யும் இப்படத்திற்கு கோவிந்தா வசந்தா இசையமைத்து வருகிறார். கிரிக்கெட்டை மையாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் நண்பர்களின் நட்பினை கொண்டாடும் படமாக இப்படம் உருவாகி வருகிறது. 

ashok selvan

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அரக்கோணம் பகுதியில் நடைபெற்றுள்ளது. முக்கிய நடிகர், நடிகர்கள் தவிர உள்ளூர் மக்களை வைத்தே இப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நேற்று நிறைவுபெற்றுள்ளது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து உடனடியாக தயாரிப்பு பணிகள் தொடங்கவுள்ளது. 

 

 

Share this story